கனடாவில் 6 மாத குழந்தையுடன் காணாமல் போன இளம்தாயாரின் நிலை என்ன? புகைப்படத்துடன் பொலிசார் கூறிய தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காணாமல் போன இளம் தாயார் மற்றும் அவரின் குழந்தை பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான தகவலை ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

Bahra Bahram என்ற 27 வயது பெண்ணும் அவரின் 6 மாத குழந்தையான Ramsis Bahramம் 26ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பகல் 12 மணிக்கு காணாமல் போனார்கள்.

அதாவது இருவரும் Jane St + Steeles Av W பகுதியில் கடைசியாக காணப்பட்டனர்.

இதையடுத்து Bahra Bahram மற்றும் Ramsis Bahram புகைப்படங்களை வெளியிட்ட பொலிசார் இருவர் குறித்து தகவல் தெரிந்தால் தங்களுக்கு தெரிவிக்கலாம் என கூறியிருந்தனர்.

இந்த நிலையில் காணாமல் போன Bahra Bahram மற்றும் Ramsis Bahram ஆகிய இருவரும் தற்போது பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் உதவியவர்களுக்கு நன்றி என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்