கனடா மருத்துவமனையில் பழங்குடியின பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: இரண்டாவது நபர் மீது பாய்ந்த நடவடிக்கை

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் சிகிச்சை தேடிச் சென்ற பழங்குடியின பெண்மணியை இன ரீதியாக துன்புறுத்திய விவகாரத்தில் இரண்டாவது நபர் மீது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கியூபெக் மருத்துவமனையில் செப்டம்பர் 28 ஆம் திகதி குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜாய்ஸ் எகுவான் என்ற 37 வயது தாயார் கடந்த வார இறுதியில் வயிற்று வலி இருப்பதாக கூறி ஜோலியட் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால் அந்த மருத்துவமனை ஊழியர்கள், 7 பிள்ளைகளுக்கு தாயாரான் அந்த பெண்மணியை அவமானப்படுத்தியதுடன், அனைவரையும் ஏமாற்றுவதாகவும் இழிவாக பேசியுள்ளனர்.

இச்சம்பவம் காணொளியாக பதிவாகி, சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்க்கவே, விவகாரம் பெரும் விவாதத்தையும் அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பில் முதலில் ஒரு செவிலியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் மீது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நாடாமல் இருப்பதன் முதன்மையான காரணம், அவர்கள் எதிகொள்ள நேரிடும் இனவாத தாக்குதலே என விசாரணை அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னதாக ஜாய்ஸ் எகுவான் என்ற அந்த பழங்குடியின தாயார் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் தொடர்பில் காணொளி ஒன்றும் வெளியாகவே, பொதுமக்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் அந்த பெண்மணிக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்