கனடாவில் கொரோனா நிதியுதவியை திருப்பிக் கொடுத்த 830,000 பேர்! என்ன காரணம் தெரியுமா? வெளியான ரகசியம்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் அவசர கால கொரோனா நிதியுதவியைப் பெற்ற 830,000-க்கும் அதிகமானோர், தாங்கள் பெற்ற நிதியை திருப்பிக் கொடுத்துள்ளனர்.

அவசர அவசரமாக நிதி உதவி வழங்கப்பட்டதில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.

கனடா வருவாய் ஏஜன்சி அளித்த தகவலின்படி, நிதியை திருப்பிக் கொடுத்த அனைவருமே, தாமாக முன் வந்தே கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

கனடா வருவாய் ஏஜன்சி செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இப்படி பயனாளர்கள் தாமாகவே முன்வந்து நிதியைத் திருப்பிக் கொடுத்ததற்கு பல காரணங்கள் உள்ளது என்கிறார்.

ஒரே காலகட்டத்தில் இரு இடங்களில் தவறுதலாக விண்ணப்பித்தவர்கள், தாங்கள் இந்த நிதி உதவி பெற தகுதியற்றவர்கள் என பின்னர் தெரியவந்தவர்கள் அல்லது எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே பணிக்குத் திரும்பிவிட்டவர்கள் என பல காரணங்களால் தாங்கள் பெற்ற நிதியை பயனர்கள் திருப்பிக்கொடுத்துவிட்டார்கள் என்கிறார்.

ஆனால், பலர் மோசடி செய்து இந்த நிதியுதவியை பெற்றதாக தங்களுக்கு 20,000-க்கும் மேற்பட்ட ரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும், அந்த தகவல்கள் உண்மைதானா என ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கனடா வருவாய் ஏஜன்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்