வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட கனேடியர்கள்.! சாலையோரம் கிடந்த குழந்தை: உறவினர்கள் போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றி

Report Print Balamanuvelan in கனடா

சிரியாவில் வான்வழித் தாக்குதல் ஒன்றில் கனேடிய தம்பதி உயிரிழக்க, அவர்களது ஐந்து வயது மகள் அநாதரவாக விடப்பட்டாள்.

சாலையோரம் கிடந்த அவள், அகதிகள் முகாம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தாள்.

தாய் தந்தையரை இழந்த நிலையில் யாருமின்றி அநாதரவாக தவித்த ஆமிரா என்ற அந்த ஐந்து வயதுக் குழந்தையை மீட்டு கனடாவுக்கு கொண்டுவர அவளது உறவினர்கள் படாத பாடு பட்டார்கள்.

கடைசியாக நீதிமன்றம் ஏறி, பெடரல் அரசு, ஆமிராவுக்கு அவசர கால பயண ஆவணங்களை மறுப்பதன் மூலமும், அவளை கனடாவுக்கு கொண்டு வருவதற்கு சிரிய அரசுக்கு அதிகாரப்பூர்வ கோரிக்கை விடுக்க தவறுவதன் மூலமும் அவளது உரிமைகளை மீறுவதாக வாதிட்டனர்.

inhalton

தற்போது, ஆமிரா கனடா தூதரக அலுவலர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டு கனடாவுக்கு வந்துகொண்டிருப்பதாக செய்தி கிடைத்துள்ளது.

நேற்று ஆமிராவின் உறவினர்கள் வெளியிட்ட செய்தி ஒன்றில், ஆமிரா நாடு திரும்பும் செய்தி கேட்டு தாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய அனைவருக்கும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tolga Akmen/AFP/Getty Images

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்