கனேடிய பெண் மீது 399 குற்றச்சாட்டுகள்: அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in கனடா

தனக்கு 38 மில்லியன் டொலர்கள் கிடைக்க இருப்பதாக கதைவிட்ட பெண்ணை நம்பி கனேடியர்கள் பலர் ஏமாந்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

Jane Moore (45) தான் கால்கரியில் ஒரு செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றும், தனக்கு 38 மில்லியன் டொலர்கள் குடும்பச் சொத்து தனக்கு கிடைக்க இருப்பதாகவும் கூறி மக்களை ஏமாற்றியுள்ளார்.

அவர் விட்ட கதையை நம்பி மக்கள் அவருக்கு கடன் கொடுக்க, பல ஆயிரம் டொலர்கள் மோசடி செய்துவிட்டார் அவர்.

Jane மீது 399 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் 5,000 டொலர்கள் மோசடி செய்த ஒரே ஒரு குற்றத்தை மட்டும் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட நிலையில், மூன்று மாதங்கள் வீட்டுச்சிறையிலும், ஆறு மாதங்கள் கண்காணிப்பிலும் வைக்கப்பட உள்ளார் Jane.

Provided by The Canadian Press

அத்துடன், அவர் தன்னால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு 40,000 டொலர்களை திருப்பிச் செலுத்தவேண்டும்.

Jane ஏற்கனவே 17 ஆண்டுகளுக்கு முன் 77 மோசடி குற்றங்கள் மற்றும் திருட்டு தொடர்பான குற்றங்களுக்காக இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்