கனடாவில் காணாமல் போன 26 வயது தமிழ்ப்பெண்! புகைப்படத்துடன் வெளியான தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் 26 வயதான தமிழ்ப்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களை ரொரன்ரோ பொலிசார் தங்கள் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி ரோஜா ஸ்ரீதரன் என்ற 26 வயது இளம்பெண் கடந்த 8ஆம் திகதி முதல் மாயமாகியுள்ளார்.

அதே நாளில் Warden Ave and Eglinton Ave E பகுதியில் ரோஜா ஸ்ரீதரன் கடைசியாக காணப்பட்டுள்ளார்.

5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவராக ரோஜா ஸ்ரீதரன் இருப்பார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன போது கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட், கருப்பு ஷூ மற்றும் நீல நிறத்திலான ஸ்வெட்டரை அவர் அணிந்திருந்தார்.

ரோஜா ஸ்ரீதரனை பார்த்தாலோ அவர் குறித்து தகவல் தெரிந்தாலோ தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்