முன்னாள் மனைவிக்கு பல ஆண்டுகளாக தொல்லை கொடுத்தவர்களை பழி தீர்க்க கணவர் செய்த செயல்

Report Print Balamanuvelan in கனடா

தனது முன்னாள் மனைவிக்கு பல ஆண்டுகளாக தொல்லை கொடுத்துவந்த நான்கு பேரை வீடு தேடிச் சென்று ஒவ்வொருவராக கொன்று குவித்தார் கனேடியர் ஒருவர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 60 முதல் 70 வயது வரையுள்ள நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

முதலில் பொலிசாருக்கு யார் இப்படி செய்தது, கொலையின் நோக்கம் என்ன என எந்த விடயமும் புரியாமல் இருந்தது.

பொலிசார் குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில், John Brittain என்பவர் பொலிசாரிடம் தான்தான் அந்த கொலைகளை செய்ததாக அவர்களிடம் சரணடைந்தார். கொலை செய்யப்பட்ட நால்வருமே John Brittainஇன் முன்னாள் மனைவி Katherine Brittainஇன் வீட்டைச் சுற்றி வாழ்ந்தவர்கள்.

Provided by The Canadian Press

அவர்கள் Katherineக்கு பல ஆண்டுகளாக தொல்லை கொடுத்துவந்திருக்கிறார்கள். பொறுத்துப்பொறுத்துப் பார்த்த John, ஒரு நாள் உரிமம் பெற்ற தன்னுடைய துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு வரிசையாக அந்த நால்வரின் வீடுகளுக்கும் சென்றுள்ளார்.

அமைதியாக ஒவ்வொருவரையாக சுட்டுகொன்றுவிட்டு, கடைசியாக பொலிசாரிடம் சரணடைந்த John, தான் பலரது வாழ்க்கையை ஒரே நாளில் பாழாக்கிவிட்டதாகவும், ஆனால், அதற்கும் தன் முன்னாள் மனைவிக்கும் சம்பந்தமில்லை என்றும் கூறியுள்ளார்.

Johnக்கு 25 ஆண்டுகள் வரை ஜாமீனில் வர இயலாத சிறைத்தண்டனை வழங்கப்படலாம். John வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்