கனடாவில் காலியான பேருந்தில் 17 வயது இளம்பெண்ணிடம் மோசமாக நடந்த தெற்காசிய நபர்! பொலிசார் வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பேருந்தில் 17 வயது இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட தெற்கு ஆசிய நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

பிரிட்டீஷ் கொலம்பியாவின் Abbotsfordல் உள்ள பேருந்து நிலையத்தில் 17 வயது இளம்பெண் நின்றிருந்த போது அவரை 60களில் உள்ள முதியவர் அணுகியுள்ளார்.

பின்னர் பேருந்து வந்தவுடன் இளம்பெண்ணுடன் சேர்ந்து முதியவரும் ஏறியிருக்கிறார்.

பேருந்து காலியாக இருந்த போதிலும் வேண்டுமென்றே இளம்பெண் அருகில் உட்கார்ந்த அந்த நபர் அவரை தவறான முறையில் தொட்டு தொல்லை கொடுத்திருக்கிறார்.

இளம்பெண் சங்கடமாக உணர்ந்ததை கண்ட பேருந்து ஓட்டுனர், அவரை நோக்கி எதாவது உதவி வேண்டுமா என கேட்டதோடு முதியவரை வேறு இருக்கையில் அமர கூறினார்.

இதை தொடர்ந்து முதியவர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி சென்றுவிட்டார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

அவரிடம் தவறாக நடந்து கொண்ட நபர் தெற்கு ஆசியர் என பொலிசார் கூறியுள்ளதோடு தலையில் டர்பன் அணிந்திருப்பார் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் யாருக்கேனும் தகவல் கிடைந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்