இதை நிறுத்திவிடுங்கள்! கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை

Report Print Basu in கனடா

ஹாங்காங் குடியிருப்பாளர்களுக்கு புகலிடம் வழங்க வேண்டாம் என்று கனடாவிற்கான சீன தூதர் ட்ரூடோ அரசாங்கத்திற்கு எச்சரித்துள்ளார்.

ஹாங்காங்கில் சீனா விதித்த தேசிய பாதுகாப்பு சட்டம் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஹாங்காங்கில் சீனா விதித்த தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக போராடும் முன்னணி ஜனநாயக செயற்பாட்டாளர்களை வன்முறை குற்றவாளிகள் என கனடாவிற்கான சீன தூதர் காங் பீவு முத்திரை குத்தினார்.

மேலும் கனடா அவர்களுக்கு புகலிடம் அளித்தால் அது சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகும் என எச்சரித்தார்.

கடந்த ஆண்டு ஹாங்காங் மற்றும் பிரதான சீன அரசாங்கங்களுக்கு எதிரான போராட்டங்கள் அதிகதித்தன.

ஜூன் 30 முதல் நடைமுறைக்கு வந்த புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் சீனா ஹாங்காங் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தியது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்