மாணவ மாணவியரை நெருங்கிய மர்ம நபர்... மூன்று பள்ளிகள் மூடல்: கனடாவில் திடீர் பயத்தை ஏற்படுத்திய சம்பவம்

Report Print Balamanuvelan in கனடா

கனடா பள்ளி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் மாணவ மாணவியரை நெருங்கி அவர்களுடன் உரையாட முயன்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகத்திற்குரிய வகையில் காணப்பட்ட அந்த நபர், தான் மற்றொரு நபரை தேடுவதாக அந்த மாணவ மாணவியரிடம் கூறியுள்ளார்.

ஆனால், உடனே அந்த மாணவர்கள் பள்ளி நிர்வாகிகளிடம் அந்த மர்ம நபரைக் குறித்து கூறியுள்ளார்கள்.

உடனே பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட, விரைந்துவந்த பொலிசார் அந்த மர்ம நபரைத் தேடத்துவங்கியுள்ளார்கள்.

ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து, அந்த பள்ளியுடன் தொடர்புடைய வேறு இரண்டு பள்ளிகளையும்

சேர்த்து, மூன்று பள்ளிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாணவ மாணவியர் தனியாக வீடுகளுக்கு செல்லாமல் இருவர் இருவராக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்