கனடாவில் சமூகவலைதளம் மூலம் பழக்கமான இளைஞனை நேரில் சந்திக்க சென்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!

Report Print Raju Raju in கனடா

கனடாவில் சமூகவலைதளம் மூலம் பழக்கமான 14 வயது சிறுமியை நேரில் வரவழைத்து அவரிடம் பாலியல் ரீதியான தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் Whitecourt-ஐ சேர்ந்தவர் Kenneth Bardilas (27).

இவர் கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னேப் ஷாட் மூலம் 14 வயது சிறுமியிடம் நட்பாகியுள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை கேட்ட Kenneth Bardilas பின்னர் தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவருக்கு அனுப்பியுள்ளார்.

இதை தொடர்ந்து சிறுமியும், Kenneth Bardilasம் நேரில் சந்தித்து கொண்ட போது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட அவர் பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட Kenneth Bardilas மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரால் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதும் நிலையில் அப்படி பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்