பிரித்தானிய மகாராணியாரை கௌரவிக்க கனடா செய்துள்ள செயல்! என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in கனடா

பிரித்தானிய மகாராணியார்தான் கனடாவுக்கும் மகாராணியார் என்கிற விடயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆம், இன்றும் பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத்தான் (94) கனடாவுக்கும் மகாராணியார், மட்டுமல்ல, காமன்வெல்த் நாடுகளுக்கும் அவர்தான் தலைவர்!

கனேடிய அரசு, கனடாவுக்கான மகாராணியாரின் புதிய அதிகாரப்பூர்வ திருவுருவப்படத்தை வெளியிட்டுள்ளது.

Chris Jackson என்ற புகைப்படக்கலைஞர் எடுத்த அந்த புகைப்படம், மகாராணியாருக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவை கௌரவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள கனேடிய தூதரகங்களில் அதிகாரப்பூர்வ மகாராணியாரின் படமாக, நேற்று வெளியிடப்பட்ட இந்த படம்தான் இனி இருக்கும்.

மகாராணியாரின் படம் வெளியானதும் அவரது ரசிகர்கள், ட்விட்டரில் அவரது படத்தை புகழ்ந்து கமெண்ட்களை வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்