வீடு ஒன்றில் சுயநினைவின்றி கிடந்த 5 பேர்... எரிவாயுக் கசிவு என்று எண்ணிய பொலிசார்: பின்னர் தெரியவந்த அதிர்ச்சி தகவல்

Report Print Balamanuvelan in கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டனர். சர்ரேயிலுள்ள அந்த வீட்டிற்குள் பொலிசார் நுழைந்தபோது, அந்த வீட்டிற்குள் ஐந்துபேர் சுயநினைவின்றிக் கிடப்பதைக் கண்ட பொலிசார், அந்த வீட்டில் எரிவாயுக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என கருதினர்.

ஆனால் வீட்டை சோதித்தபோது அங்கு எரிவாயுக் கசிவு ஏற்பட்டதற்கான எந்த தடயமும் இல்லை.

மருத்துவ உதவிக்குழுவினர் மயங்கிக் கிடந்த அந்த ஐந்து பேரையும் சோதித்தபோது, அவர்கள் அளவுக்கதிகமாக போதை மருந்து உட்கொண்டதால் சுயநினைவின்றிக் கிடப்பது தெரியவந்தது.

அவர்கள் வீட்டில் எந்த போதைப்பொருளும் கிடைக்காத நிலையில், அவர்கள் எங்கு வைத்து போதைப்பொருள் உட்கொண்டார்கள் என்பது தெரியவில்லை.

ஆனால், அவர்களுக்கு மிக அதிக அளவில் எதிர்ப்பு மருந்து தேவைப்பட்டதிலிருந்து, மிக அதிக அளவில் அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்