கனடாவில் கோவிலுக்கு வந்த சிறுமியிடம் பாலியல் தாக்குதல் நடத்திய சாமியார் கைது! அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

Report Print Raju Raju in கனடா
1278Shares

கனடாவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் கோவிலுக்கு வந்த சிறுமியிடம் பாலியல் ரீதியான தாக்குதல் நடத்திய வழக்கில் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொரன்ரோவின் Etobicokeல் உள்ள ஷேவாஸ்ரம் சங்கா கனடிய கோவிலுக்கு 8ல் இருந்து 11 வயதுக்குள் உடைய சிறுமி கடந்த 1994ல் இருந்து 1997 வரை சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் கோவிலில் இருந்த சாமியாரான சுவாமி புஷ்காரனந்தா அந்த சிறுமி மீது பாலியல் ரீதியான தாக்குதலை பல தடவை நிகழ்த்தியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக தற்போது 68 வயதாகும் புஷ்காரனந்தா கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர் மீது சிறார் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

புஷ்காரனந்தாவால் வேறு சிலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதும் பொலிசார் அது தொடர்பாக தகவல் உள்ளவர்கள் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்