அவர்களை நினைத்தால் அச்சமாக உள்ளது! கனடாவில் ஒரே நேரத்தில் காணாமல் போன 2 சிறுமிகள்! புகைப்படத்துடன் தகவல்

Report Print Raju Raju in கனடா
331Shares

கனடாவில் இரண்டு சிறுமிகள் காணாமல் போனது தொடர்பாக பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

வடக்கு மொண்ட்ரியல் மற்றும் அஞ்சோ ஆகிய இரண்டு இடங்களில் இருந்து தான் இருவரும் வியாழன் முதல் மாயமாகியுள்ளனர்.

இருவரும் தனித்தனியாக பகல் நேரத்தில் காணாமல் போனதாக தெரியவந்துள்ளதோடு ஒருவருக்கொருவர் தொடர்பில்லை எனவும் தெரியவந்துள்ளது.

L'Orie Jeune (11) மற்றும் El Yasmine Hechachena (12) என்ற சிறுமிகளின் பாதுகாப்பு மற்றும் தற்போதைய நிலையை நினைத்தால் அச்சமாக உள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருவரையும் கண்டுபிடிக்க எல்லா விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுமிகள் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்