உய்குர் இஸ்லாமியர்கள் தொடர்பாக போலியான தகவல்களை கனடா கூறி வருவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் உய்குர் இஸ்லாமியர்கள், உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வசித்து வருகின்றனர்.
சீனாவின் பல்வேறு மாநிலங்களில் குழந்தை பிறப்புகள் கட்டுப்படுத்தப்பட்டாலும், இந்த மாகாணத்தில் மட்டும் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக இஸ்லாமியர்கள், சிறுபான்மைப் பிரிவினர் இடையே குழந்தைப் பேற்றைத் தடுக்க அத்துமீறும் செயல்களில் சீன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியானது
அதுமட்டுமின்றி அங்குள்ள மசூதிகளை சீனா இடிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதனால், உய்குர் இஸ்லாமியர்கள் தொடர்பாக உலக நாடுகளிடையே எதிர் மறையான விமர்சனத்தை சீனா பெற்றது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டைசீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், கனடா நாடாளுமன்றம் சீனாவின் ஸ்திரத்தன்மையை புறக்கணிக்கிறது, உய்குர் இஸ்லாமியர்கள் குறித்தும் சிறுபான்மையினர் குறித்து தவறான தகவல்களை கனடா நாடாளுமன்றம் பரப்புகிறது.
சீனாவின் உள்விகாரங்களில் கனடா தலையிடுகிறது. இது கனடாவின் அறியாமையை பிரதிப்பலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.