கனடாவில் மரம் வெட்டும் போது உயிரிழந்த வேறு நாட்டை சேர்ந்த இளைஞன்! வெளியான முழு தகவல்

Report Print Raju Raju in கனடா
164Shares

கனடாவில் மரம் வெட்டும் போதும் உயிரிழந்த இளைஞனின் உடலை சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.

வான்கூவர் தீவில் வசித்து வந்த Eddie Mather என்ற இளைஞன் கடந்த செவ்வாய்க்கிழமை மரம் வெட்டும் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் உயிரிழந்தார்.

கனடாவில் வசித்து வந்தாலும் Eddieன் சொந்த நாடு அவுஸ்திரேலியா ஆகும். இதையடுத்து அவரின் உடலை அங்கு கொண்டு செல்ல நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.

Eddieன் குடும்பத்தார் அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்த் கொண்டுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், ஒரு அழகான நண்பர், சகோதரர் மற்றும் மகனாக Eddie இருந்தார்.

நேர்மறை ஆற்றல் மற்றும் புன்னகை ததும்பிய முகத்துடன் வாழ்ந்தவர் Eddie என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்