கனடாவில் ஓட்டுனராக நடித்து பெண்ணை காருக்குள் வைத்து துஷ்பிரயோகம் செய்த இளைஞன்! மேலும் வெளிவரும் பகீர் தகவல்கள்

Report Print Raju Raju in கனடா
3256Shares

கனடாவில் உபர் ஓட்டுனர் போல நடித்து பெண்ணை காருக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Langley-வை சேர்ந்தவர் Hirdeypal Batth (24). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி பெண்ணிடம் சென்று தான் உபர் கார் ஓட்டுனர் என பொய் கூறினார்.

பின்னர் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக காருக்குள் அடைத்து துஷ்பிரயோகம் செய்து தாக்கியுள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் Hirdeypal Batth-ஐ கைது செய்தனர். மேலும் அவரின் காரையும் கைப்பற்றினார்கள்.

கைது செய்யப்பட்ட Hirdeypal மீது சமீபத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையில் Hirdeypal Batth குறித்து பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதாவது Hirdeypal Batth மீது ஏற்கனவே 2017ல் ஒரு பலாத்கார வழக்கு உள்ளது.

அவரால் மேலும் சில பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், எனவே அவர் குறித்து யாருக்கேனும் மேலும் தகவல் தெரிந்தாலோ பாதிக்கப்பட்டிருந்தாலோ தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்