முன்னாள் மனைவியை அவமானப்படுத்த கனேடியர் செய்த மோசமான செயல்

Report Print Balamanuvelan in கனடா

முன்னாள் மனைவியை அவமானப்படுத்துவதற்காக, அவர் புலம்பெயர்தலில் மோசடி செய்ததாக கூறி, அவரை நாடுகடத்தும் முயற்சியில் இறங்கினார் கனேடியர் ஒருவர்.

தத்தம் துணைவர்களைப் பிர்ந்தவர்களான, CH என்ற கனேடியரும் XG என்ற சீனப் பெண்ணும் ஒன்லைனில் சந்தித்துள்ளனர்.

இருவரும் திருமணம் செய்துகொள்வது என முடிவு செய்ததைத் தொடர்ந்து, XG கனடாவில் வாங்கியிருந்த வீட்டில் இருவரும், XGயின் 16 வயது மகனும் வாழத்துவங்கியுள்ளனர். ஆனால், தம்பதியின் திருமண வாழ்க்கை மூன்று ஆண்டுகளே நீடித்த நிலையில் இருவரும் பிரிந்துள்ளனர்.

மனைவி தன்னைப் பிரிந்ததால், அவரை பழிவாங்க முடிவு செய்த CH, புலம்பெயர் அதிகாரிகளிடம் மனைவி மீது போலியாக புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அவர் மோசடி செய்து கனடாவுக்கு வந்ததாகவும், தன்னை அடிப்பதாகவும், சாட்சி ஒருவரை மிரட்டுவதாகவும் புகாரளித்ததோடு, அவர் பணத்துக்காக பாலியல் தொழில் செய்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார் CH.

இது போதாதென்று, XG தன்வீட்டின் மதிப்பில் பாதியான 216,000 டொலர்கள் தனக்கு தர வேண்டும் என்று கோரியதோடு, தனக்கு மாதம் 1,500 டொலர்கள் ஜீவனாம்சம் தரவேண்டும் என்றும் கோரியிருந்தார் CH.

வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, XG மீதான குற்றச்சாட்டுகள் ஆதராமற்றவை என்றும், நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தோரைப் பொருத்தவரை, அவர்கள் எளிதில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கவைக்கப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், CH, தனக்கு தன் முன்னாள் மனைவி XG ஜீவனாம்சம் தரவேண்டும் என்று கோரியதை நிராகரித்து, அவர்தான் மனைவிக்கு 12,000 டொலர்கள் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அந்த பெண், தன் வீட்டின் மொத்த மதிப்பிலான பணத்தையும் தானே எடுத்துக்கொள்ளலாம், கணவனுக்கு எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார் நீதிபதி

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்