லொட்டரியில் வெறும் $1 பரிசை வென்ற நபருக்கு பின்னர் காத்திருந்த இன்ப அதிர்ச்சி! என்ன தெரியுமா?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் லொட்டரியில் $2 மில்லியன் பரிசை வென்றுள்ள நபர் பரிசு பணத்தில் முதலில் வீடு வாங்கவுள்ளார்.

Nanaimo நகரை சேர்ந்தவர் Brad Rowan. இவருக்கு Daily Grand லொட்டரியில் $1 பரிசு விழுந்தது.

அந்த பரிசு பணத்தை வைத்து B.C./49 லொட்டரியில் ஓன்லைன் மூலம் விளையாடினார்.

அதில் Bradக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி காத்திருந்தது, அதன்படி லொட்டரியில் அவர் $2 மில்லியன் பரிசை வென்றுள்ளார்.

Brad கூறுகையில், பரிசு பணம் விழுந்ததை உறுதி செய்த பின்னர் அலுவலகத்துக்கு போன் செய்து விடுமுறை எடுக்க போவதாக கூறினேன்.

பின்னர் பரிசு பணத்தை சென்று பெற்று கொண்டேன், இப்படியொரு அதிர்ஷ்டம் அடித்தது எனக்கும் என் மனைவிக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

முதலில் பரிசு பணத்தில் வீடு வாங்குகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்