பைடனுடன் போனில் பேசிய முதல் உலகத் தலைவரானார் கனடா பிரதமர் ட்ரூடோ! இருவரும் விவாதித்த முக்கிய விஷயங்கள் இது தான்

Report Print Basu in கனடா

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசிய முதல் உலகத் தலைவரானார்.

பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல உலகளாவிய தலைவர்கள் பைடனை சமூக ஊடகங்கள் வாயிலாக வாழ்த்தியிருந்தாலும், வாழ்த்து தெரிவிக்க பைடனை போனில் முதன்முதலில் அழைத்தவர் ட்ரூடோ.

இதுகுறித்து கனடா பிரதமர் அலுவலகம் அளித்த தகவலில், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போனில் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த போன் உரையாடலின் போது முக்கிய விஷியங்களான கொரோனா, சீனா மற்றும் காலநிலை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர் என தெரிவித்துள்ளது.

பைடன் மற்றும் ட்ரூடோ கனடா-அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்தவும், வர்த்தகம், softwood lumber, Buy America, எரிசக்தி உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், கருப்பு எதிர்ப்பு இனவெறிக்கு தீர்வு காண்பதன் முக்கியத்துவத்திலும் அவர்கள் கவனம் செலுத்தினர் என கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்