பெண்கள் கழிவறையை பயன்படுத்துவதைக்கூட கண்காணிக்கும் அதிகாரிகள்... கனடாவில் நடைமுறையிலிருக்கும் ஒரு பயங்கர தண்டனை

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு ஒரு பயங்கர தண்டனை வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை முடிவுக்கு கொண்டுவர சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

அது, dry cells என்ற அறைகளில், குற்றவாளிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் ஒரு பயங்கர தண்டனை.

குற்றவாளி ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவரை காவலர்கள் கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டே இருப்பார்கள், அவர் கழிவறையை பயன்படுத்தும்போது கூட... அத்துடன் 24 மணி நேரமும் குற்றவாளி இருக்கும் அறையில் பயங்கர வெளிச்சத்தைக் கொடுக்கும் விளக்குகள் பளீரென வெளிச்சம் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

கழிவறையில் தண்ணீரை ப்ளஷ் செய்யவும் முடியாது, குழாயில் தண்ணீரும் வராது. அதாவது, குற்றவாளி தன் உடலுக்குள் போதைப்பொருள் எதையாவது மறைத்துவைத்திருக்கிறாரா என்பதை அறிவதற்காகத்தான் இந்த தண்டனை.

Patrick Callaghan/CBC News

மறைத்துவைத்திருக்கும் பொருள் இயற்கை உபாதையைக் கழிக்கும்போது வெளியே வரும் வரை இந்த தண்டனை தொடரும்.

இப்படிப்பட்ட ஒரு சிறையில் அடைக்கப்பட்டார் Lisa Adams (33). போதைப்பொருள் கடத்தியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இரண்டு வாரங்கள் dry cell அறையில் அடைக்கப்பட்டார் Lisa.

போதைப்பொருள் வைத்திருப்பதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட Lisaவை, ஸ்கேன் கருவி மூலம் சோதனையிட்டனர் அதிகாரிகள், அதில் ஒன்றும் தெரியாததால், அவரது உடைகளைக் களைந்து சோதனையிட்டனர், அப்படியும் எதுவும் கிடைக்காததால் dry cell அறையில் அடைக்கப்பட்டார் Lisa.

Lisa தன் பெண்ணுறுப்புக்குள் போதைப்பொருளை மறைத்துவைத்திருப்பதாக சந்தேகப்பட்டார்கள் அதிகாரிகள். பெண்ணுறுப்பை சோதனையிடக்கூடாது என்பதற்காக, அவரை dry cell அறையில் அடைத்து அவர் சிறுநீர் கழிக்கும்போதும் கண்காணித்துக்கொண்டே இருந்தார்கள் அவர்கள்.

David Laughlin/CBC

ஒரு பெண் என்ற முறையில் கூட அவருக்கு கொஞ்சம் கூட பிரைவசி கொடுக்காமல் 16 நாட்கள் அடைத்துவைத்து அவரது அந்தரங்கத்தையே கவனித்தும் ஒன்றும் கிடைக்கவில்லை.

கடைசியாக தன்னை ஒரு மருத்துவர் சோதிக்க கோரிக்கை வைத்தார் Lisa. மருத்துவர் பரிசோதித்ததில், Lisa தன் பெண்ணுறுப்புக்குள் போதைப்பொருள் எதையும் மறைத்துவைக்கவில்லை என்ற உண்மை தெரியவந்தது.

ஆனால், இந்த கொடிய சித்திரவதை Lisaவை கடுமையாக பாதித்தது, தன்னகுத்தானே பேசிக்கொண்டு, முடியைப் பிய்த்துக்கொண்டு, அதிகாரிகள் சொல்வது புரியாமல், மன நிலை பாதிக்கப்படும் ஒரு நிலைக்கு சென்றுவிட்டார் அவர்.

இப்போது, Lisa சார்பில், குறைந்தபட்சம் பெண்கள் சிறையிலாவது இந்த dry cell அறையை நீக்கவேண்டும் என்று கோரி சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளனர்.

Elizabeth Fry Society

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்