கனடாவில் வேனைக்கொண்டு மோதி 10 பேரைக் கொலைசெய்த நபர் கூறிய வார்த்தைகள்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் வாடகைக்கு வேன் ஒன்றை அமர்த்தி, அதைக் கொண்டு மோதி 10 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த நபர், என் கடமையை நிறைவேற்றி விட்டது போல் உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி, ரொரன்றோவில் பாதசாரிகள் கூட்டத்துக்குள் வேன் ஒன்றை செலுத்தி, நிற்காமல் வேகமாக சென்ற Alek Minassian (28) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

இந்த கோர சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டார்கள், பலர் படுகாயமடைந்தார்கள், மூளை பாதிக்கப்பட்டவர்களும் கால்களை இழந்தவர்களும் அதில் அடக்கம். அவர் மீது 10 கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் 16 கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

விசாரணையில், Minassian, Incel என்ற ஒன்லைன் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.

இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், காதலிக்கவும், பாலுறவு கொள்ளவும் பெண் கிடைக்காததால், பெண்கள் மீதும் பாலுறவு கொள்பவர்கள் மீதும் வெறுப்புற்று, அவர்களை கொலை செய்யும் எண்ணம் கொண்டவர்கள் ஆவர்.

அப்படிப்பட்ட எண்ணத்துடன்தான் Minassianம் வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு, கூட்டத்தில் வேனை செலுத்தி மக்கள் மீது மோதியுள்ளான். அதில் இறந்தவர்களில் ஒருவர் 150 மீற்றர் தூரத்திற்கு வண்டியில் அடிபட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

22 முதல் 94 வயது வரையுள்ள எட்டு பெண்களும் இரண்டு பெண்களும் கொல்லப்பட்டார்கள்.

இதற்கிடையில், Minassianஇன் சட்டத்தரணி, தன் கட்சிக்காரர் இந்த குற்றச்செயலுக்கு பொறுப்பல்ல, அவரது மன நல பிரச்சினைதான் நடந்த சம்பவத்திற்கு காரணம் என வாதிட இருக்கிறார்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள Minassianஇடம், 10 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 16 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள், இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால் அவன் கூறிய பதில்... நான் எனது கடமையை நிறைவேற்றியதுபோல் உணர்கிறேன் என்பதுதான்!

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்