கனடாவில் செல்போன் பேசி கொண்டிருந்த போது உயிரிழந்த இந்திய மாணவன்! நடந்தது என்ன? வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் தங்கி படித்து வந்த இந்திய மாணவன் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பன்யம் அகில் (19).

இவர் கனடாவின் ரொரன்ரோவில் தங்கி ஹொட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 8ஆம் திகதி அகில் தனது செல்போனில் வீட்டின் பால்கனியில் நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்த போது நிலைதடுமாறி அவர் கீழே விழுந்து பலியாகியுள்ளார்.

இது குறித்து கனடாவில் உள்ள அவரது நண்பர்தான், ஹைதராபாத்தில் உள்ள குடும்பத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அகில் கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்துக்கு விடுமுறையில் வந்திருக்கிறார்.

இதையடுத்து சமீபத்தில் தான் மீண்டும் கனடாவுக்கு திரும்பியிருக்கிறார் என தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்