கனடாவில் அதிகாலை 3 மணிக்கு மதுபோதையில் கார் ஓட்டிய பெண்ணால் நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் அதிகாலையில் நடந்த கார் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியாவில் தான் இந்த சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது.

Byrne சாலையில் ஒரு கார் வேகமாக சென்ற நிலையில் விபத்தை சந்தித்தது.

இந்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். மற்றொரு 20 வயதான பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என தெரியவந்துள்ளது.

பொலிசார் கூறுகையில், மது போதையில் காரை வேகமாக ஓட்டியதால் தான் இந்த விபத்து நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்