ஒரே நாளில் 5,000ஐ நெருங்கிய கொரோனா தொற்று: கனடா பிரதமர் மற்றும் சுகாதாரத்துறை தலைவர் எச்சரிக்கை

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் இரண்டாவது நாளாக கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 5,000ஐ நெருங்கியுள்ளது.

நேற்று ஒரே நாளில் கனடாவில் 4,735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த குளிர்காலத்தில் எவ்வளவு கொரோனா தொற்று இருக்கும் என்று கணித்தார்களோ அதைவிட இந்த எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், இது அபாயத்திற்குரிய அறிகுறிதான் என்கிறார்கள் அவர்கள்.

நேற்றிரவு ட்விட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கொரோனாவுக்கெதிரான நமது போராட்டம் இன்னமும் முடியவில்லை என்றார்.

இன்னமும் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது என்று கூறியுள்ள அவர், நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.

திரும்பத் திரும்ப ஒரே விடயத்தை கேட்டுக் கேட்டு சலிப்பாகத்தான் இருக்கும் என்றாலும், மாஸ்க் அணிவதையும், சமூக விலகலை பின்பற்றுவதையும் தொடரத்தான் வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.

அத்துடன், கனடா சுகாதாரத்துறை தலைவரான Dr. Theresa Tam, கொரோனா நாட்டின் பல பகுதிகளில் பயங்கரமாக பரவிக்கொண்டிருக்கிறது. இப்போதே நாம் அதைக் கட்டுப்படுத்தியாகவேண்டும், அப்போதுதான் டிசம்பரில் இதேபோன்ற நிலைமையை தவிர்க்கமுடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்