கனடாவில் காணாமல் போன அழகிய இளம்பெண்! அஞ்சும் குடும்பத்தார்... வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காணாமல் போன அழகிய இளம்பெண் தொடர்பிலான பின்னணி தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

St-Hyacintheஐ சேர்ந்தவர் Annabelle Laprise (16).

இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.15 மணிக்கு கடைசியாக காணப்பட்டார். இதன் பின்னர் Annabelle Laprise மாயமானார்.

இது தொடர்பாக பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் Annabelle Laprise மொண்ட்ரியலில் இருக்கலாம் என கருதுகிறோம்.

Annabelleன் பாதுகாப்பு மற்றும் தற்போதைய நிலையை நினைத்து அவளின் அன்புக்குரியவர்கள் அஞ்சுகிறார்கள்.

Annabelle 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர். காணாமல் போன அன்று அவர் கருப்பு நிற உடைகளை அணிந்திருந்தார்.

அவர் குறித்து தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்