அவள் என்னை ஏமாற்றினாள்! கனடாவில் தற்கொலை செய்து கொண்ட இந்திய இளைஞன்... சிக்கிய உருக்கமான கடிதம்

Report Print Raju Raju in கனடா

இந்தியாவை சேர்ந்த இளைஞன் கனடாவில் வசித்து வந்த நிலையில் காதலியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த பிரணய். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அகிலா என்ற பெண்ணுடன் நட்பான பிரணய் பின்னர் அவருடன் காதலில் விழுந்துள்ளார்.

இருவரும் லிவிங் டு கெதராக இருந்த நிலையில் ஆகஸ்டில் இருவருக்கும் திருமணம் நடப்பதாக இருந்தது.

ஆனால், காதலர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர்.

பிரணியின் முரட்டுத்தனமான நடத்தையால் தான் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக தெலங்கானா பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தான் பிரணய் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் நேற்று அவர் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது.

தற்கொலைக்கு முன்னர் பிரணய் எழுதியிருந்த கடிதத்தில், ஹெச் 1 விசா வந்த பின்னர் அகிலா என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள்.

அவள் என்னை ஏமாற்றி தனது முன்னாள் காதலனுடன் பேசினாள்.

தங்களின் உறவின் முறிவுக்கு அகிலாவின் பெற்றோர் தான் காரணம் எனவும் அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நான் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை எதிர்நோக்கியிருந்தேன், நான் எந்த தவறும் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையில் பிரணய் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசும், அதிகாரிகளும் உதவ வேண்டும் என குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்