தலை சுற்றலுக்கு காரணம் மசக்கை என்று எண்ணிய எட்டு மாத கர்ப்பிணி: கோமா நிலையில் குழந்தை பெற்றெடுத்த பரிதாபம்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் எட்டு மாத கர்ப்பிணிப்பெண் ஒருவர் தலை சுற்றல் ஏற்பட்டபோது, அதற்கு காரணம் தான் கர்ப்பமாக இருப்பதுதான் என்று எண்ணினார்.

ஆகவே, மருத்துவமனைக்கு சென்றார் Gill McIntosh (37) என்ற அந்த பெண். ஆனால், மருத்துவமனையில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் கோமா நிலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், Gillக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக மருத்துவமனையிலிருந்து அவரது கணவர் Dave McIntoshக்கு தகவல் வந்தது.

மனைவிக்கு கொரோனா என்று தெரியவந்ததுமே முன்ஜாக்கிரதையாக Dave McIntoshம் அவரது மகளும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டார்கள்.

பின்னர் அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், இருவருக்குமே கொரோனா இல்லை என தெரியவந்தது.

தற்போது Gillக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ள நிலையில், அந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.

அடுந்த வாரம் குழந்தையை வீட்டுக்கு அழைத்துவர இருக்கிறார் Dave. ஆனால், சிசேரியனுக்குப் பிறகு Gill இன்னமும் கோமாவில்தான் இருக்கிறார்.

மனைவியை மிகவும் நேசிக்கும் Dave, தங்கள் குடும்பம் அனைத்து கொரோனா கட்டுப்படுகளையும் சரியாக கடைப்பிடித்ததாகவும், அதுவும் பிறக்கவிருக்கும்

குழந்தையை எண்ணி தாங்கள் அனைவரும் மிக அதிக பாதுகாப்பாக இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.

அப்படியிருந்தும் தன் மனைவிக்கு கொரோனா தொற்றியுள்ளதாக கூறும் Dave, இப்போதைக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் கூட போதுமானவை அல்ல, ஊரடங்கு என்பது மோசமானதுதான், என்றாலும், எல்லாவற்றையும் உடனே மூடவேண்டும், இனியாவது, கொரோனாவை சீரியசாக எடுத்துக்கொள்ளவேண்டும் என எச்சரிக்கிறார்.

Submitted to CBC

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்