லாஸ்லியாவின் தந்தை மரணம் குறித்து கனடா அரசு சான்றிதழ்! எத்தனை நாட்களில் இலங்கை வரும்? வெளியான தகவல்

Report Print Santhan in கனடா
2619Shares

கனடாவில் உயிரிழந்த லாஸ்லியாவின் மரணம் இயற்கையானது என்று அந்நாட்டு அரசு சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பிக்பாஸ் பிரபலம், லாஸ்லியாவின் தந்தை கனடாவில் சமீபத்தில் திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார்.

இந்த மரண செய்தியை கேட்டு லாஸ்லியா ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒட்டு மொத்தமாக நிலைகுலைந்து உள்ளனர்.

இந்த கொரோனா காரணமாக கனடாவில் இருந்து அவரின் உடல் கொண்டு வரப்படுமா? தமிழகத்தில் இருக்கும் லாஸ்லியா இலங்கை திரும்பமுடியுமா போன்ற பல கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், தற்போது கனடா அரசு, லாஸ்லியாவின் தந்தை மரிநேசனின் மரணம் இயற்கை மரணம் என்று சான்றழிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உடல் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு கொண்டு வரப்படும், அதற்கான முழு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தயவு செய்து தவறான செய்திகள் எதையும் பரப்ப வேண்டாம் என்று அவரின் மைத்துனர் மயூரான் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த மரண செய்தியைக் கேட்டு, லாஸ்லியாவின் தாய் மற்றும் சகோதரி மிகுந்த துயரத்தில் இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் லாஸ்லியா இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்