வீட்டு சமையலறையை சுத்தம் செய்த பெண்ணுக்கு கிடைத்த எதிர்பார்க்காத அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் வீட்டை சுத்தம் செய்த போது பெண்ணுக்கு ஒரு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

டெல்டா நகரை சேர்ந்தவர் Carolyn Bauer. இவர் தனது வீட்டை சமீபத்தில் சுத்தம் செய்தார்.

அப்போது வீட்டு சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த ரேடியோவுக்கு பின்னால் அவர் வாங்கிய Lotto 6/49 டிக்கெட்கள் இருந்ததை கண்டார்.

அந்த லொட்டரி டிக்கெட்களை முன்னர் வாங்கிய Carolyn பின்னர் அதை மறந்தே போயுள்ளார்.

அதில் ஒரு லொட்டரி சீட்டுக்கு $58,502.50 பரிசு விழுந்துள்ளதை கண்டு அவர் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

Carolyn கூறுகையில், எனக்கு லொட்டரியில் பரிசு விழுந்ததை நம்பமுடியவில்லை, இது உண்மையா அல்லது கனவா என என்னை நானே கிள்ளி பார்த்து கொண்டேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்