கனடாவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான விமானம்! விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்

Report Print Basu in கனடா
0Share

கனடாவில் சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Calm ஏர் விமானநிறுவனத்திற்கு சொந்தமான 464 சரக்கு விமானம் Nunavut-ல் உள்ள Naujaat விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

Calm ஏர் இன்டர்நேஷனலின் நிறுவனம் வெளியிடப்பட்ட அறிக்கையில், மதியம் 1:30 மணியளவில் Naujaat விமான நிலையத்தில் தனது சரக்கு விமானங்களில் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி ஓடி விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளது.

இந்த விபத்தின் போது பயணிகள் யாரும் விமானத்தில் இல்லை, விமானக் குழுவினர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து Calm நிறுவனம் கனடா போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் வேறு எந்த விவரங்களையும் வழங்கவில்லை.

விபத்தை தொடர்ந்து அவசரகால பணியாளர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும், இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என Naujaat விமான நிலையத்தின் மூத்த நிர்வாக அதிகாரி கெவின் டெகுமியார் கூறினார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்