கனடாவில் கடந்த 13ஆம் திகதி காணாமல் போன இந்திய இளம்பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த செய்தியை ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
மன்ப்ரீத் கவுர் என்ற 23 வயதான இளம்பெண் கடந்த 13ஆம் திகதி மாலை 7.18 மணிக்கு கடைசியாக Victoria Park Av + Danforth Av பகுதியில் காணப்பட்டார்.
இதன்பின்னர் கவுர் காணாமல் போயிருக்கிறார்.
இதை தொடர்ந்து கவுரின் உயரம், அவர் காணாமல் போன போது அணிந்திருந்த உடை குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டது.
மேலும் கவுரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை பொலிசார் நாடினர்.
இந்த நிலையில் கவுர் தற்போது பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் உதவியர்களுக்கு நன்றி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.