உங்கள் எதிர்காலம் குறித்து எனக்கு தெரியும்... ஒரு மில்லியன் அமெரிக்கர்களை மோசடி செய்த கனேடியர் சிக்கினார்

Report Print Balamanuvelan in கனடா
132Shares

உங்கள் எதிர்காலம் குறித்து எனக்கு தெரியும், தனிப்பட்டமுறையில் உங்களைக் குறித்து நான் சொப்பனத்தில் பார்த்தேன் என்பதுபோன்ற அணுகுமுறை மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களிடம் மோசடி செய்த கனேடியர் ஒருவர் சிக்கினார்.

Patrice Runner (54) என்ற கனேடியர் தனக்கு சிறப்பு சக்திகள் இருப்பதாகக் கூறி, ஏராளம் அமெரிக்கர்களுக்கு கடிதங்களும் மின்னஞ்சல்களும் அனுப்பியுள்ளார். இந்த டொலரை நீங்கள் அணிந்துகொண்டால் நல்லது நடக்கும், என்பது போன்ற செய்திகளை அனுப்பி எளிதில் ஏமாறக்கூடியவர்களை குறிவைத்து சிறிது சிறிதாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் Runner.

சிறிது சிறிதாக மோசடி செய்தாலும், Runnerம் அவரது கூட்டாளிகளும் மோசடி செய்துள்ள தொகை கிட்டத்தட்ட 200 மில்லியன் டொலர்கள்!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Maria Duval என்பவர் எதிர்காலத்தை கணித்தல் போன்ற விடயங்களைச் செய்யும் பிரபலம் ஆவார். அவரது பெயரை பயன்படுத்தி, அவர் அனுப்புவது போலத்தான் இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பலரும், தாங்கள் Maria Duvalஐ தொடர்பு கொள்வதாகவே நம்பி பணம் அனுப்பியிருக்கிறார்கள்.

இதே மோசடியை Runner அமெரிக்காவில் மட்டுமல்ல, கனடாவிலும் செய்துள்ளார். இந்நிலையில், சிக்கியுள்ள Runner மீது 18 மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஸ்பெயினில் சிக்கிய Runner, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். அவர் 20 ஆண்டுகள் வரை சிறை செல்ல நேரிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், அவர் பல மில்லியன் டொலர்கள் அபராதமும் செலுத்தவேண்டியிருக்கும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்