கனடாவில் இயக்க நிலையில் நின்றுகொண்டிருந்த கார்... காருக்குள் பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Balamanuvelan in கனடா
2469Shares

கனடாவின் கால்கரி பகுதியில் நேற்று காலை, சாலை ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் எஞ்சின் இயக்க நிலையிலேயே இருந்த நிலையில், அதற்குள் இருவர் உயிரற்ற நிலையில் இருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

தகவலையடுத்து அங்கு வந்த பொலிசார் காரை சோதனையிட்டனர்.

பின்னர், அந்த கார் முந்தைய இரவு அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்றும், காருக்குள் இறந்த நிலையில் காணப்பட்ட இருவரும், திங்களன்று இரவு 9 முதல் 9.30 மணிக்குள் சுடப்பட்டிருக்கலாம் என்றும் தாங்கள் கருதுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு குற்றம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று இறந்த உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்படும் நிலையில், யாருக்காவது இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தால் தங்களுக்கு தெரிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்