கனடாவில் 14 வயது சிறுமியை கத்தியால் குத்திய சம்பவத்தில் மூன்று இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ரொறன்ரோவின் Dawes சாலையில் அமைந்துள்ள கட்டிடத்தில் தான் இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு நடந்துள்ளது.
கத்திக்குத்து பட்ட சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் சூழலில் உயிருக்கு ஆபத்து இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.