கனடாவிற்குள் நுழைய இனி இது கட்டாயம்!

Report Print Ragavan Ragavan in கனடா
694Shares

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு எதிர்மறையான கோவிட் -19 சோதனைக்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்று கனடா அரசாங்கம் புதன்கிழமை அறிவித்தது.

கனடா நாட்டு விமானத்தில் பயணிப்பதற்க் மூன்று நாட்களுக்கு முன்பாகவே PCR சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கனடாவுக்கு வந்தவுடன் பயணிகள் இன்னும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பிரித்தானியாவிலிருந்து புதிய வகைக் கொரோனா வைரஸ் கனடா உட்பட உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவ ஆரம்பித்துள்ள நிலையில், பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கனேடிய விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்புடன், இந்த புதிய நடவடிக்கை விரைவாக செய்லபடுத்தப்படும் என நாட்டின் உள்துறை அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்