மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற இருக்கும் நாடு...

Report Print Balamanuvelan in கனடா
989Shares

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் இரண்டாவது நாடு என்ற பெருமையை கனடா பெற உள்ளது. ஆம், அமெரிக்காவைத் தொடர்ந்து, கனடா, விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப இருக்கிறது.

50 ஆண்டுகளில் முதன்முறையாக கனேடிய விண்வெளி வீரர் ஒருவர் நாஸா விண்வெளி வீரர்களுடன் இணைந்துகொள்ள இருக்கிறார்.

2023ஆம் ஆண்டு, Artemis II என பெயரிடப்பட்டுள்ள அந்த விண்வெளி பயணத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

முதன்முதலில் நிலவில் கால் வைக்க இருக்கும் கனேடிய விண்வெளிவீரரான Chris Hadfield, இது குறித்து ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். விரைவில் இரண்டு கனேடிய விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் செல்கிறோம் என்று கூறியுள்ளார் அவர்.

NASA via AP

இரண்டாவது கனேடிய விண்வெளிப் பயணம், சற்று பிந்தி ஏற்பாடு செய்யப்படும் என தெரிகிறது.

இன்னமும் யார் விண்வெளிக்குப் போகிறார்கள் என்பது குறித்து நாஸாவோ, கனேடிய விண்வெளி ஏஜன்சியோ எந்த அறிவிப்பும் செய்யவில்லை என்றாலும், மற்றொரு கனேடிய விண்வெளி வீரரான Jeremy Hansen என்பவரும், நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது கனடாவுக்கும் கனேடியர்களுக்கும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான வாய்ப்பு என ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையில், கனடா, விண்வெளி வீரர்களை மட்டுமல்லாது, Canadarm3 என்னும் ரோபோ ஒன்றையும் அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்