கனடாவில் வீட்டுக்குள் 50 வயதான நபர் இறந்து கிடந்த சம்பவத்தில் இரண்டு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மணிடோபாவில் உள்ள ஒரு வீட்டில் 50 வயதான நபர் சில தினங்களுக்கு முன்னர் இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள்.
இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் அந்த நபரை கொலை செய்ததாக 22 வயதுடைய இரண்டு இளைஞர்களை பொலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.