கனடாவில் தோன்றிய உலகையே பீதியில் ஆழ்த்திய மர்ம தூணுக்கு நேர்ந்த கதி! வெளியான வீடியோ

Report Print Basu in கனடா
3240Shares

கனடாவில் தோன்றிய உலகையே பீதியில் ஆழ்த்திய மர்ம தூண் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் மர்ம தூண்கள் தோன்றத் தொடங்கியது.முதன் முறையாக அமெரிக்க மாநிலமான Utah-வில் காணடுபிடிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து ரஷ்யா, ஜேர்மனி, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, சுவீடன், இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் போலந்து உட்பட உலகெங்கிலும் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இதே போன்ற தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் மனிடோபா உட்பட கனடா முழுவதும் ஒரு சில இடங்களில் இதேபோன்ற தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், Toronto நகரத்தின் Humber Bay Shores சுற்றுப்புறத்தில் வியாழக்கிழமை காலைக்கு முன்பு 11.5 அடியில் ஒற்றை மர்ம தூண் தோன்றியது.

யாரோ, அந்த தூண் மீது சிவப்பு மற்றும் கருப்பு பெயிண்டில் வரைந்து சேதப்படுத்தியுள்ளனர்.

புத்தாண்டிற்கு முன்தினம் மாலை மற்றும் புத்தாண்டு தினத்திற்கு இடையில் தூண் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்பகுதி வாசிகள் மர்ம தூண் அருகே நின்று புகைப்படமெடுக்க Humber Bay Shores பகுதியில் குவிந்து வருகின்றனர்.

ஆனால் அதை எப்படி, எப்போது, ​​யார் நிறுவியது என்பது பற்றி எதுவும் தெரியாது என Toronto நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்