கனடாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை தாண்டியுள்ளது. கனடாவில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 606,076 ஆகியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 15,880 ஆகியுள்ளது.
கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்றான ஒன்ராறியோவில், நேற்று புதிதாக 2,964க்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதோடு, 25 பேர் பலியாகியும் உள்ளார்கள்.
கடந்த வாரத்தில், சராசரியாக நாளொன்றிற்கு 2,792 பேருக்கு தொற்று அதிகரித்துவந்ததுடன், ஒரே நாளில் 3,363 பேர் பாதிக்கப்பட்ட நிகழ்வும் நடந்தது.
அதிக மக்கள்தொகை கொண்ட மற்றொரு மாகாணமான கியூபெக்கில் 2020 டிசம்பர் 31க்குப் பின் 7,663 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, 121 பேர் பலியாகியுள்ளார்கள்.