கனடாவில் இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் காரில் இருந்து கீழே இறங்கிய இளைஞனுக்கு நேர்ந்த கதி! விசாரிக்கும் பொலிசார்

Report Print Raju Raju in கனடா
6568Shares

கனடாவில் காரில் இருந்து கீழே இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்த நபர் மீது வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பான தகவலை ஒன்றாறியோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அங்குள்ள நெடுஞ்சாலையில் சில தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் 18 வயதான இளைஞர் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

பின்னர் காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்த போது அவர் மீது வாகனம் ஒன்று வேகமாக மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் எதற்காக காரில் இருந்து இறங்கினார் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்