கனடா திரும்புவோருக்காக அறிமுகமாகும் புதிய கொரோனா விதிமுறைகள்: மீறினால் கடும் தண்டனை

Report Print Balamanuvelan in கனடா
289Shares

கனடா திரும்புவோருக்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள கொரோனா விதி ஒன்று கடும் குழப்பத்தை ஏற்படுத்தும் என தேசிய விமான சேவை அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 7ஆம் திகதி முதல் வேறு நாடுகளிலிருந்து கனடா திரும்புவோருக்காக புதிய விதிமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அது என்னவென்றால், ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், கனடா புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில், தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் மின்னணு ஆவணம் ஒன்றை பயணிகள் சமர்ப்பித்தால் மட்டுமே கனடா செல்லும் விமானத்தில் ஏற அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்..

அத்துடன், அந்த சோதனை பி.சி.ஆர் முறையில் (PCR) செய்யப்பட்டதாக மட்டுமே இருக்கவேண்டும்.

அதுமட்டுமின்றி, கொரோனா இல்லை என்றாலும் கூட, கனடா வந்ததும் அவர்கள் 14 நாட்களுக்கு தங்களை கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

விதிகளை மீறுவோருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், 750,000 டொலர்கள் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் புதிய விதிமுறை கூறுகிறது.

இந்நிலையில், இதுவரை போக்குவரத்து துறைக்கு எந்தெந்த ஏஜன்சிகளால் செய்யப்படும் சோதனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்பது குறித்தும், கொடுக்கப்பட்ட ஆவணம் செல்லத்தக்கதா என்பதைக் குறித்தும் விவரங்கள் அளிக்கப்படாத நிலையில், இந்த புதிய விதிமுறை பயணிகளுக்கு கடும் குழப்பத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தும் என தேசிய விமான சேவை கவுன்சிலின் தலைவரான Mike McNaney கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்