கனடாவில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த 7 வயது சிறுமி! அவர் வசித்த வீட்டில் இருந்த 6 பேர்

Report Print Raju Raju in கனடா
1290Shares

கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 7 வயது சிறுமி தொடர்பில் இளைஞர் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

Laval நகரில் தான் இந்த சம்பவம் கடந்த ஞாயிறு அன்று நடந்தது. குறித்த வீட்டில் பேச்சு மூச்சில்லாமல் 7 வயது சிறுமி கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு வந்த பொலிசார் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையில் அவர் ஏற்கனவே வீட்டிலேயே இறந்தது தெரியவந்தது.

சிறுமியின் உடலில் காயங்கள் மற்றும் கடுமையான தீக்காயங்கள் இருந்ததாக பொலிசார் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் பொலிசாருடன் சேர்ந்து இளைஞர் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

சிறுமி இருந்த வீட்டில் அவரின் பெற்றோர் உட்பட 6 பேர் இருந்த நிலையில் அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை முடிவில் சிறுமி இறப்பின் மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்