27 வயதில் உயிரிழந்த இளம் நடிகர்! கனடாவில் நடந்த சோகம்

Report Print Raju Raju in கனடா
546Shares

கனடாவில் 27 வயதான இளம் நடிகர் Taran Kootenhayoo உயிரிழந்துள்ளார்.

கனடாவின் Cold Lake நகரில் பிறந்தவர் Taran Kootenhayoo (27). இவர் வான்கூவரில் உள்ள நடிப்பு பள்ளியில் நடிப்பு பயின்றார். பின்னர் திரைப்படங்களில் Taran நடிக்க தொடங்கினார்.

இந்த நிலையில் Taran உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் இறப்பிற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

ஒரு பிரபல துணி நிறுவனத்துக்கு Taran மொடலாக நடித்தார்.

அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும், உங்களை மிகவும் மிஸ் செய்வோம் Taran என கூறப்பட்டுள்ளது.

கடந்த 2018ல் நம்பிக்கைக்குரிய புதுமுகம் என்ற ஜெஸ்ஸி தியேட்டர் விருதை அவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்