கனடாவில் பெண் ஒருவரை பல மணி நேரம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒருவரை பொலிசார் கண்ணீர் புகை குண்டு வீசி பிடித்தனர்.
Burnabyயில் ஒரு பெண் ஒருவரை 48 வயது நபர் ஒருவர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, அவரிடமிருந்து தப்பிய அந்த பெண் அவசர உதவி கோரி பொலிசாரை அழைத்தார்.
நேற்று மாலை 5 மணிக்கு பொலிசார் அந்த நபர் இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பல மணி நேரம் அவருடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில், இரவு சுமார் 10 மணியளவில் வீட்டுக்குள் கண்ணீர் புகை குண்டு ஒன்றை வீசினர் பொலிசார். அதன்பிறகே அவரைப் பிடிக்க முடிந்துள்ளது.

அவரது பெயர் மற்றும் அந்த பெண்ணும் அவருக்கும் உள்ள உறவு குறித்து பொலிசார் எதுவும் தெரிவிக்கவில்லை.
அந்த நபர் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அந்த நபர் மீது பல வாரண்ட்கள் உள்ள நிலையில், அவரிடம் துப்பாக்கி ஒன்றும் இருந்திருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
