கனடாவில் மலைப்பகுதியில் தொலைந்து போன 21 வயது இளம்பெண் உயிரிழந்துவிட்டார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஒன்றாறியோவை சேர்ந்தவர் Nikki Donnelly (21). தனியாக மலைப்பகுதிக்கு அடிக்கடி செல்லும் பழக்கத்தை அவர் வைத்திருந்தார்.
அதன்படி பனிகள் நிறைந்த பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள மலைப்பகுதிக்குள் Nikki Donnelly தனியாக சென்றிருக்கிறார்.
அங்கிருந்து திரும்பி வர வழி தெரியாத அவர் திணறிருக்கிறார். இரவு முழுவதும் அங்கேயே Nikki இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அங்கிருந்து தனது காதலனை தொடர்பு கொள்ளவும் அவர் முயன்றிருக்கிறார்.
இந்த நிலையில் Nikki இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி நாள் முழுவதும் பொலிசார் தேடுதல் வேட்டை நடத்திய சூழலில் செங்குத்தான வடிகால் பகுதியில் Nikki கண்டெடுக்கப்பட்டார்.
அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என பொலிசார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.