கனடாவில் மரத்தை வெட்டிய நபரின் உயிரை பறித்த அதே மரம்! வெளியான முழு பின்னணி

Report Print Raju Raju in கனடா
597Shares

கனடாவில் மரம் வெட்டிய நபர் அதன் கீழ் பகுதியில் சிக்கி கொண்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மொண்றியலில் உள்ள Hebertville நகராட்சியில் தான் இந்த சம்பவம் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு நடந்துள்ளது.

அங்குள்ள ஒரு மரத்தை நபர் ஒருவர் வெட்டியுள்ளார், அந்த மரமானது அவர் மீதே விழுந்த நிலையில் அதன் கீழ் பகுதியில் சிக்கி கொண்டார்.

சம்பவத்தின் போது அவர் மட்டுமே அந்த இடத்தில் தனியாக இருந்தார்.

பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தடயவியல் அடையாள சேவைகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்