கனடாவின் ரொறன்ரோவை சேர்ந்த 26 வயது இளம்பெண் தொடர்பில் புகைப்படத்துடன் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

Report Print Raju Raju in கனடா
304Shares

கனடாவில் காணாமல் போயுள்ள இளம்பெண் தொடர்பில் முக்கிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இந்த தகவலானது ரொறன்ரோ பொலிசாரின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Susan Felix என்ற 26 வயதான இளம்பெண் கடந்த 11ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

அன்றைய தினம் தான் அவர் தனக்கு தெரிந்தவர்களுடன் கடைசியாக பேசியிருக்கிறார்.

Susan Felix தற்சமயம் ரொறன்ரோவில் தான் இருப்பார் என பொலிசார் கருதுகின்றனர். 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட Susan Felix ஒல்லியான உடல் வாகு கொண்டவர் ஆவார்.

அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொலிசார் உதவி கோரியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்