கனடாவில் சாலையில் நடந்து சென்று சிறுவர், சிறுமிகள் முன்னர் உடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Innisfail-ஐ சேர்ந்தவர் Terry Haskell (68).
இவர் கடந்த 13ஆம் திகதி அங்குள்ள வீட்டின் வாசலில் உடைகளை களைந்து நிர்வாணமாக நின்றார்.
அப்போது அந்த வழியாக சிறுவர், சிறுமிகள் நடந்து சென்றனர்.
இந்த நிலையில் அநாகரீகமான செயலை செய்த குற்றத்துக்காக பொலிசார் Terry Haskellஐ கைது செய்துள்ளனர்.
அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்ததோடு உள்ளூர் பள்ளி வாரியத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பொதுமக்களுக்கு பொலிசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.